அடுக்கக வாழ்வின் இறுக்கத்தைக் களைய இலட்சிய வாழ்வின் நீட்சியாய் உதிப்பது தனிவீடு எனும் பெருங்கனவு . உட்கார உறங்க சமைக்க சுவைக்க துதிக்க படிக்க என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறை- வாயிலில் சில மரங்கள் பல பூச்செடிகள் என்றிருக்க... தனி வீடு பற்றி கனவு காணுவோர் எவரும் மொட்டை மாடி பற்றி சிந்தித்ததுண்டா? பரந்து விரிந்த வானத்தையும் காலையில் உதிக்கும் ஆதவனையும் இரவில் தோன்றும் அம்புலியையும் மின்மினியாய்ப் பளபளக்கும் விண்மீன்களையும் தரிசிக்க, வேண்டிப் பெற்ற வரம் மொட்டை மாடி..! இயந்திர வாழ்வின் இச்சையில் உழன்று காலக் கணினியின் மாயையில் சிக்கித் தொலைந்த போது மறந்து போன வரங்களுள் ஒன்று மொட்டை மாடி..! காணி நிலமும் தென்னைமரமும் மாடமாளிகையுடன் கேணிநீரும் வேண்டிய பாட்டனார் பாரதியே! மொட்டை மாடியை வேண்ட மறந்ததேனோ..?! இன்று.... ஊரடங்கின் உளைச்சலில் சிறையுண்டு சிக்கிநின்ற வேளை சுதந்திரக் காற்றை சுவாசிக்க எமைத் தாங்கி நிற்கும் தோழியாய்... போக்கிடமற்று தூக்கம் தொலைத்து அழுத்தம் ஏற்பட்ட வேளை மனச்சோர்வு நீக்கும் நண்பனாய்... ஆலயங்களும், பூங்காக்களு...