வெள்ளிக்கிழமை வழிபாடு முடித்து, அமர்ந்த போது தொலைபேசி அழைத்தது. அம்மா….! இன்னும் 10 நிமிஷத்துல வந்திடுவேன். ‘ டின்னர்’ ரெடியா இருக்கா? செம்ம பசி…..ம்ம்…என்ன ‘டின்னர்?’ என்றான் மகன். ‘சப்பாத்தி, பனீர்’….தயாரா இருக்கு… சூப்பர்…அப்புறம் ..அம்மா….உங்களுக்கு ஒரு பரிசு கொண்டு வரேன்… பரிசா… என்னது? சஸ்பென்ஸ்… ‘10 நிமிஷத்துல தெரியப் போகுது…..சொல்லுடா…’ என்றேன். ‘அதான் 10 நிமிஷத்துல தெரியப் போகுதுல…..காத்திருங்க’ என்றான் மகன். *** என்ன பரிசாக இருக்கும்…? …. பல ஊகங்கள் தோன்றினாலும் , பிறந்த நாள், திருமண நாள், அன்னையர் தினம் என்ற எந்தச் சிறப்பு தினமும் இல்லாமல் எதற்குப் பரிசு…? என்ன பரிசு…? வழக்கம் போல் தலைக்கு...