மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு .... தமிழக அரசு அறிவிப்பு . அறிவிப்பு வந்த உடனேயே என்னென்ன பொருட்கள் தேவை? எப்போது கடைகள் கூட்டம் இல்லாமல் இருக்கும்? எந்த நேரம் போய் பொருட்களை வாங்கலாம்? என 15 நாட்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் சேர்க்க நாம் சிந்திக்க தொடங்கிவிட்ட வேளையில்...! ஊர் அடங்கைப் பற்றிய சிந்தனைகள் இன்றி அந்த ஊரடங்கின் போதும் சேவை செய்யப் போகும் ( தற்போது செய்து கொண்டும் இருக்கும் ) மருத்துவர்கள் , செவிலியர் , துப்புரவுப் பணியாளர்கள் , டன்ஸோ பணியாளர்கள் ,( அத்தியாவசிய பொருட்களை நுகர்வோரிடம் சேர்ப்பவர்கள் ) நாளிதழ் , பால் , காய்கறி விற்பனையாளர்கள் , உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் , அதை நுகர்வோரிடம் சேர்க்கும் சுவிகி , சோமடோ போன்ற நிறுவன பணியாளர்கள் , தலைமைச் செயலக ஊழியர்கள் , பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிபுரியும் பணியாளர்கள் , மின்சாரத் துறைப் பணியாளர்கள் , சிறைத்துறை , காவல்துறை , உள்ளாட்சித் துறை , வனத்துறை , சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியவற்ற...