Skip to main content

Posts

Showing posts from September, 2021

‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’

விநாயகரின் அவதாரத் திருநாளாகிய ஒவ்வொரு விநாயகச் சதுர்த்தி அன்றும் பூமாலையால் பூஜிக்கும் அருளை அளிக்கும்   என் ஐயன் இம்முறை பாமாலையாலும் அவரை வழிபடும் வரத்தை அருளி இருக்கிறார். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ தமிழின் முதல் எழுத்துகளாம் ‘உயிர்’ எழுத்துகளால் தொடங்கும் 108 போற்றிகளை இனிய தமிழில் இயற்றியுள்ளேன். ஓம்கார ரூபனாய் ஐயன் விளங்குவதால் ப்ரணவத்தையும் இணைத்துள்ளேன். மங்கலம் பொங்கும் இந்நன்னாளில் பாலுடன் தெளிதேனையும் பாகு பருப்புடன் அளித்து சங்கத்தமிழை வரமாகக் கேட்ட ஒளவை பெருமாட்டியின் ‘விநாயகர் அகவலுடன்’ அடியேன் இயற்றிய 108 போற்றிகளையும் பாடி,எருக்காலும் அருகாலும் அய்யனை வழிபாடு   செய்து அவனருள் பெற்று இன்புற வேண்டுகிறேன். சூழ்கலி போக்கி ஒளியை வழங்குவான் நம் செல்லப் பிள்ளை. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ விநாயகர் போற்றி! ஓம் அகரமாய் எழுந்தாய் போற்றி ! ஓம் அன்பாய் மலர்ந்தாய் போற்றி! ஓம் அறிவாய் ஒளிர்வாய் போற்றி! ஓம் அப்பனாய் ஆனாய் போற்றி! ஓம் அருகம்புல் அணிவாய் போற்றி! ஓம் அன்னையின் செல்வமே போற்றி! ஓம் அளவிலாக் கருணையே போற்றி! ஓம் அள்ளித்தரும் வள்ளல...