விநாயகரின் அவதாரத் திருநாளாகிய ஒவ்வொரு விநாயகச் சதுர்த்தி அன்றும் பூமாலையால் பூஜிக்கும் அருளை அளிக்கும் என் ஐயன் இம்முறை பாமாலையாலும் அவரை வழிபடும் வரத்தை அருளி இருக்கிறார். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ தமிழின் முதல் எழுத்துகளாம் ‘உயிர்’ எழுத்துகளால் தொடங்கும் 108 போற்றிகளை இனிய தமிழில் இயற்றியுள்ளேன். ஓம்கார ரூபனாய் ஐயன் விளங்குவதால் ப்ரணவத்தையும் இணைத்துள்ளேன். மங்கலம் பொங்கும் இந்நன்னாளில் பாலுடன் தெளிதேனையும் பாகு பருப்புடன் அளித்து சங்கத்தமிழை வரமாகக் கேட்ட ஒளவை பெருமாட்டியின் ‘விநாயகர் அகவலுடன்’ அடியேன் இயற்றிய 108 போற்றிகளையும் பாடி,எருக்காலும் அருகாலும் அய்யனை வழிபாடு செய்து அவனருள் பெற்று இன்புற வேண்டுகிறேன். சூழ்கலி போக்கி ஒளியை வழங்குவான் நம் செல்லப் பிள்ளை. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ விநாயகர் போற்றி! ஓம் அகரமாய் எழுந்தாய் போற்றி ! ஓம் அன்பாய் மலர்ந்தாய் போற்றி! ஓம் அறிவாய் ஒளிர்வாய் போற்றி! ஓம் அப்பனாய் ஆனாய் போற்றி! ஓம் அருகம்புல் அணிவாய் போற்றி! ஓம் அன்னையின் செல்வமே போற்றி! ஓம் அளவிலாக் கருணையே போற்றி! ஓம் அள்ளித்தரும் வள்ளல...
மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு .... தமிழக அரசு அறிவிப்பு . அறிவிப்பு வந்த உடனேயே என்னென்ன பொருட்கள் தேவை? எப்போது கடைகள் கூட்டம் இல்லாமல் இருக்கும்? எந்த நேரம் போய் பொருட்களை வாங்கலாம்? என 15 நாட்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் சேர்க்க நாம் சிந்திக்க தொடங்கிவிட்ட வேளையில்...! ஊர் அடங்கைப் பற்றிய சிந்தனைகள் இன்றி அந்த ஊரடங்கின் போதும் சேவை செய்யப் போகும் ( தற்போது செய்து கொண்டும் இருக்கும் ) மருத்துவர்கள் , செவிலியர் , துப்புரவுப் பணியாளர்கள் , டன்ஸோ பணியாளர்கள் ,( அத்தியாவசிய பொருட்களை நுகர்வோரிடம் சேர்ப்பவர்கள் ) நாளிதழ் , பால் , காய்கறி விற்பனையாளர்கள் , உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் , அதை நுகர்வோரிடம் சேர்க்கும் சுவிகி , சோமடோ போன்ற நிறுவன பணியாளர்கள் , தலைமைச் செயலக ஊழியர்கள் , பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிபுரியும் பணியாளர்கள் , மின்சாரத் துறைப் பணியாளர்கள் , சிறைத்துறை , காவல்துறை , உள்ளாட்சித் துறை , வனத்துறை , சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியவற்ற...