காலத்தை வென்ற கண்ணோட்டங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் கொண்டு வாழ்ந்தவர்கள் சங்ககால மக்கள். சமூக வாழ்வின் மேம்பாட்டுக்காகவும் மனிதர்களுக்கு அறிவுரை கூறவும் புலவர்கள் பல பாடல்களைப் பாடினர்.மன்னர்கள் தவறு செய்யும்பொழுது தக்க நேரத்தில் அறிவுரை கூறி அவர்களைத் திருத்தும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றிருந்தனர்.
பாண்டிய மன்னர் ஒருவரின் அதிகாரிகள் கெடுபிடி செய்து வரி வசூலித்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். மக்கள் படும் இத்துயரை எடுத்துச் சொல்லும் பொறுப்பைப் பிசிராந்தையார் என்னும் புலவர் ஏற்று மன்னரிடம் சென்று தாம் ஓர் உவமானம் மூலம் அவருக்கு செய்தியை உணர்த்தினார்...அந்த அரிய செய்தி...
காய் நெல்லறுத்துக் கவளங்கொளினே
மாநிறை வில்லுதும் பன்னாட் காகும்
நூறு செறு வாயினுந்த தமித்துப்புக் குளினே
வாய்புகு வதனினுங்க கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம் போலத்
தாலு முண்ணானுலகமுங் கெடுமே (புறநானூறு.184)
விளக்கம்:
காய்ந்த நெல்லைக் கவனமாக அறுத்து சேமித்தால், சிறிய நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் என்றாலும் அது ஒரு யானைக்கு பல நாள் உணவாக வரும். யானை நேரடியாக வயலில் புகுந்து உண்ணுமானால் அது நூறு வயல்களாக இருந்தாலும் அதற்கு வயிறு நிரம்பாது; நெல்லும் யானை கால் பட்டு வீணாகும். அதுபோல அரசன் மக்களிடத்து வகையறிந்து மக்களே வரிதரும்படி செய்வானாகில் செல்வம் தழைக்கும். அவ்வாறில்லாமல் அரசன் துன்புறுத்தி வசூலித்தால் மக்களும் வருந்துவர். அரசனின் ஆட்சியும் கெடும்.
தன் பொருள் பொதிந்த பாடல் மூலம் தவறு இழைக்க இருந்த அரசனைப் புலவர்கள், தவறை உணரச் செய்து நல்வழிப்படுத்திய பாங்கு வியப்புக்குரியது...!

Comments
Post a Comment