ஆயக்கலைகள் 64. இவை அனைத்துமே இறை தன்மையுடையவை. இவற்றுள் நடன கலை என்பது கலைஞரையும் கலையையும் பிரிக்க இயலாத தன்மை உடையது. சான்றாக பிற கலைகளான இசை, ஓவியம், சிற்பம், சமையல் போன்றவற்றில், கலைகளையும் கலைஞர்களையும் வேறுபடுத்தலாம். வேறுபடுத்தினும் அவற்றை நம்மால் ரசிக்க முடியும். நடனக் கலையில் மட்டும் நடனத்தையும் ஆடும் கலைஞரையும் பிரிக்க இயலாது. நடனமும் கலைஞனும் ஒன்றே என்பதானது நடனக்கலை. எனவேதான் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானும் நடனக்கலைக்குத் தன்னைத் தலைவன் ஆக்கிக்கொண்டார். நடனக்கலை மூலம் மிகப்பெரிய திருவிளையாடலையும் நிகழ்த்தினார். சபேசன் ஆகிய எம்பெருமானுக்கு உகந்த சபைகள் ஐந்து. பொற்சபை, ( கனகசபை) வெள்ளி சபை, ரத்ன சபை, தாமிரசபை, சித்திர சபை என்பன. தில்லை( சிதம்பரம் ) அம்பலத்தே பொன்னம்பல பெருமான். மதுரையில் வெள்ளியம்பலத்தான். திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயிலில் ரத்ன சபாபதி. நெல்லையப்பர் கோயிலில் தாமிர அம்பலத்தான். குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ...