உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு
இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...! படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான `தாய்மை`.
தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத் தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம்.
சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...!
தாய்மையைப் பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை.
ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_ ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...!
தாயை இறைவனாகக் காண்பது பொதுநிலை.அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை.கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு அழைத்துச் சென்று அவனையே தாய்மையை உணரச் செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை.
சீதகளப்ப செந்தாமரை..... எனத் தொடங்கும் 'விநாயகர் அகவல்' பாடலில் 'தாயாய்' எனக்குத் தானெழுந்தருளி' என இறைவனை இறைஞ்சுகிறார் பெண் கவி அவ்வையார்.
பசியால் அழுத பிள்ளைக்கு 'ஞானப்பால்' ஊட்டி பாலறாவாயனாக விளங்கிய திருஞானசம்பந்தருக்கு அருள் பாலித்ததும் உலகாளும் உமையன்னை அல்லவா?
(முதல் திருமுறை - தேவாரம் - திருஞானசம்பந்தர்)

சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியால் இறைவன் வாழும் கைலாய மலையில் தன் கால் படக்கூடாது எனத் தலையாலேயே நடந்து சென்றவர் `காரைக்கால் அம்மையார்` என அழைக்கப்படும் புனிதவதியார். அம்மையாரின் அன்பைக் கண்டு, `பிறவாயாக்கை பெரியோனாகிய பரம்பொருளாலேயே 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர்.
இப்படித் தாய்மையின் உணர்வைச் சிறப்பிக்க எவ்வளவோ சான்றுகள் உள்ளன. இறைநிலையைக் கடந்தது தாய்மை.
அன்னையர் தினம் என்ற ஒருநாளோடு நிறைவடையாமல் என்றுமே தாய்மையைப் போற்றுவோம்...!
ஏனெனில் உலக உயிர்கள் அனைத்துமே உச்சரிக்கும் ஒரு சொல் கவிதை 'அம்மா'!
உணர்வு பூர்வமான பதிவு
ReplyDeletePerfectly written and wonderful Tami, praising Ammakkal, including animals, vazhga valamudan, valarga unathu tamil manam
ReplyDeleteநன்றி
ReplyDeleteMigavum sirappu akka
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅருமையான சிந்தனை வாழ்த்துகள்
ReplyDeleteWell written Uma..Thoroughly enjoyed..You made the womenhood proud..The illustratio s are amazing..Wishig you write more n more..
ReplyDeleteஇதயம் தொட்ட அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
ReplyDeleteஅருமையான பதிவு 💟💟🌹
ReplyDeleteமிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பே சிவம் அதுவே தாயன்பு
ReplyDeleteஉங்களுடை பதிவுகள் அருமை
Thanks a lot
ReplyDeleteBrilliant.
ReplyDeleteWonderful thought
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!!
ReplyDelete