களைய
இலட்சிய வாழ்வின் நீட்சியாய்
உதிப்பது
தனிவீடு எனும் பெருங்கனவு.
உட்கார உறங்க
சமைக்க சுவைக்க
துதிக்க படிக்க
என
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறை-
வாயிலில் சில மரங்கள்
பல பூச்செடிகள்
என்றிருக்க...
தனி வீடு பற்றி
கனவு காணுவோர்
எவரும்
மொட்டை மாடி பற்றி
சிந்தித்ததுண்டா?
காலையில் உதிக்கும் ஆதவனையும்
இரவில் தோன்றும் அம்புலியையும்
மின்மினியாய்ப் பளபளக்கும் விண்மீன்களையும்
தரிசிக்க,
வேண்டிப் பெற்ற வரம் மொட்டை மாடி..!
இயந்திர வாழ்வின் இச்சையில்
உழன்று
காலக் கணினியின் மாயையில்
சிக்கித் தொலைந்த போது
மறந்து போன வரங்களுள் ஒன்று மொட்டை மாடி..!
மாடமாளிகையுடன் கேணிநீரும்
வேண்டிய
பாட்டனார் பாரதியே!
மொட்டை மாடியை
வேண்ட
மறந்ததேனோ..?!
இன்று....
ஊரடங்கின் உளைச்சலில்
சிறையுண்டு சிக்கிநின்ற வேளை
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
எமைத் தாங்கி நிற்கும் தோழியாய்...
போக்கிடமற்று தூக்கம் தொலைத்து
அழுத்தம் ஏற்பட்ட வேளை
மனச்சோர்வு நீக்கும் நண்பனாய்...
ஆலயங்களும், பூங்காக்களும்
அகலமான தெருக்களும்
பூட்டப்பட்ட
இந்நாட்களில்
இருகை அணைத்து ஆரத்தழுவும்
அன்னையாய்...
ஆனது மொட்டைமாடி..!
முடியா
நாங்கள் இங்கே அமர்ந்து நிலாச்சோறு
உண்கிறோம்.
வீதியில் சென்று நடைபயில
முடியா
நாங்கள் இங்கே நடந்து உடற்பயிற்சி
பெறுகிறோம்.
வெளியுலகு சென்று மானுடம்
காணா
நாங்கள் இங்கே நின்று தேவர்களை
வணங்குகிறோம்.
"சொந்த ஆகாயம் வேண்டும்"
என்ற
வைரக்கவியின் சொற்களுக்கு
இன்று
புது அர்த்தம் கற்பிக்கிறது
மொட்டை மாடி..!
நன்றி - ஆதிபகவன் (நிழற்படங்கள்)
அருமை
ReplyDeleteVery true Uma..Every day we walk for an hour on d terrace and after dinner we jus lie down gazing at the beauty of the night sky n come down only after 10.30 ..Well written ..Keep rocking..
ReplyDeleteVery true. Now only we are using our mottaimadi. Nice to share. Super pics.
ReplyDeleteVery nice ma'am!
ReplyDeleteWonderful. Beautifully articulated.
ReplyDeleteAbsolutely true. Beautiful lines with amazing pictures!
ReplyDeleteVery true Uma Mam, didnt realise we are utilising and benefiting so much from "mottai madi" , and Adhi's pictures .
ReplyDelete...fantastic
Super mam
ReplyDeleteநிதர்சனமான உண்மை mam. மொட்டைமாடி வெற்றிடத்திலும் உங்களது சிந்தனை சிதறல்கள் மற்றும் தங்கள் மகன் புகைப்படங்கள் அத்தனையும் மிக அருமை. வாழ்த்துக்கள் mam.
ReplyDeleteமொட்டைமாடியில் நிலாச்சோறு, இந்த நூற்றாண்டின் பிள்ளைகள் அறியா ஒரு விடயம், அனுபவத்தவருக்கு மட்டுமே அந்த ஆனந்தம் புரியும். மலரும் நினைவுகளுக்கு நன்றி 🙋🙏👏
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteYes மொட்டை மாடி நம் வாழ்வின் ஒரு பகுதி
ReplyDelete