Skip to main content

தாயுமானவர்கள்...!!!


மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு....தமிழக அரசு அறிவிப்பு.


அறிவிப்பு வந்த உடனேயே என்னென்ன பொருட்கள் தேவை?  எப்போது கடைகள் கூட்டம் இல்லாமல் இருக்கும்?  எந்த நேரம் போய் பொருட்களை வாங்கலாம்? என 15 நாட்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் சேர்க்க நாம் சிந்திக்க தொடங்கிவிட்ட வேளையில்...!

ஊர் அடங்கைப் பற்றிய சிந்தனைகள் இன்றி அந்த ஊரடங்கின் போதும் சேவை செய்யப் போகும் (தற்போது செய்து கொண்டும் இருக்கும்மருத்துவர்கள், செவிலியர்துப்புரவுப் பணியாளர்கள், டன்ஸோ பணியாளர்கள்,( அத்தியாவசிய பொருட்களை நுகர்வோரிடம் சேர்ப்பவர்கள்) நாளிதழ், பால், காய்கறி விற்பனையாளர்கள், உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள், அதை நுகர்வோரிடம் சேர்க்கும் சுவிகி, சோமடோ போன்ற நிறுவன பணியாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிபுரியும் பணியாளர்கள், மின்சாரத் துறைப் பணியாளர்கள், சிறைத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, வனத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள், தனியார் விரைவு தபால் சேவை பணியாளர்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, மற்றும் இடுகாடு சேவையாளர்கள், விவசாய விளைபொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் ஓட்டுநர்கள், ஆக்சிஜன் மற்றும் எரி பொருளை எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள்...   


இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல இவர்களை இருகரம் கூப்பி வணங்கவேண்டிய நாள் இன்று...! 

🙏 மே 9 அன்னையர் தினம்...!

தாயின் கருணையோடு தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுநல நோக்கோடு சேவை செய்பவர்கள் இந்தத் 'தாயுமானவர்கள்'


இவர்களுக்காகவும்இவர்களது குடும்பத்தினருக்காகவும் ஒரு நிமிடம் மனம் ஒன்றி பிரார்த்தனை செய்வோம்...!

இதுவே நாம் அவர்களுக்கும் நம்மைப் பெற்ற அன்னைக்கும் செய்யும் குறைந்தபட்ச' கைம்மாறு' ஆகும்

Comments

  1. Superb karuthugal new ideas.proceed uma.all the best💐💐💐💐💐

    ReplyDelete
  2. ஆம் உண்மை.தாயுமானவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு
    தந்நலம் கருதா இனிய
    உள்ள கண்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. Very nice mam .Nice reading when we are free. 7a

      Delete
  4. Superb mam....��

    ReplyDelete
  5. Timely thought. Great. Salute to all Thayumaanavargal🙏👍🙏👍

    ReplyDelete
  6. Well wrtten Uma..
    Yes..we all have to thank all the motherly souls who are fighting against the Virus.
    May them all be blessed by God to have good health .

    ReplyDelete
  7. Miss, it is very nice and interesting.

    ReplyDelete
  8. Well worded Uma. An apt tribute in other words.!!!!!!

    ReplyDelete
  9. Beautifully worded Uma. Will pray for them. May God bless them and their family.

    ReplyDelete
  10. . மிகவும் அருமையான பதிவு தாயுமானவாகளுக்கு கோடி வணக்கங்கள்

    ReplyDelete
  11. Super Uma. Very nice message for the current situation. God bless you and them with happy and healthy life.

    ReplyDelete
  12. அருமையாக இருக்கிறது, அம்மா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...