விநாயகரின் அவதாரத் திருநாளாகிய ஒவ்வொரு விநாயகச் சதுர்த்தி அன்றும் பூமாலையால் பூஜிக்கும் அருளை அளிக்கும் என் ஐயன் இம்முறை பாமாலையாலும் அவரை வழிபடும் வரத்தை அருளி இருக்கிறார். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ தமிழின் முதல் எழுத்துகளாம் ‘உயிர்’ எழுத்துகளால் தொடங்கும் 108 போற்றிகளை இனிய தமிழில் இயற்றியுள்ளேன். ஓம்கார ரூபனாய் ஐயன் விளங்குவதால் ப்ரணவத்தையும் இணைத்துள்ளேன்.
மங்கலம் பொங்கும் இந்நன்னாளில் பாலுடன் தெளிதேனையும் பாகு
பருப்புடன் அளித்து சங்கத்தமிழை வரமாகக் கேட்ட ஒளவை பெருமாட்டியின் ‘விநாயகர் அகவலுடன்’
அடியேன் இயற்றிய 108 போற்றிகளையும் பாடி,எருக்காலும் அருகாலும் அய்யனை வழிபாடு செய்து அவனருள் பெற்று இன்புற வேண்டுகிறேன்.
சூழ்கலி போக்கி ஒளியை வழங்குவான் நம் செல்லப் பிள்ளை.
‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’
விநாயகர் போற்றி!
ஓம் அகரமாய் எழுந்தாய் போற்றி !
ஓம் அன்பாய் மலர்ந்தாய் போற்றி!
ஓம் அறிவாய் ஒளிர்வாய் போற்றி!
ஓம் அப்பனாய் ஆனாய் போற்றி!
ஓம் அருகம்புல் அணிவாய் போற்றி!
ஓம் அன்னையின் செல்வமே போற்றி!
ஓம் அளவிலாக் கருணையே போற்றி!
ஓம் அள்ளித்தரும் வள்ளலே போற்றி!
ஓம் அகலிடம் ஆனாய் போற்றி!
ஓம் ஆவணி நாயகா போற்றி!
ஓம் ஆனந்த வடிவே போற்றி!
ஓம் ஆதி பகவனே போற்றி!
ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி!
ஓம் ஆலம்பம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஆனைமா முகனே போற்றி!
ஓம் ஆதிரையான் மகனே போற்றி!
ஓம் ஆலத்தில் உதித்தாய் போற்றி!
ஓம் ஆலவாய் அணிந்தோய் போற்றி!
ஓம் ஆலமர் புதல்வா போற்றி!
ஓம் ஆர்வலர் அன்பனே போற்றி!
ஓம் இருசுடர் அணிந்தோய் போற்றி!
ஓம் இமயவல்லி மைந்தா போற்றி!
ஓம் ஈறைவர்க்கு இயவுள் போற்றி!
ஓம் இலைதழை ஏற்பாய் போற்றி!
ஓம் இசைத்தமிழ் ஏற்பாய் போற்றி!
ஓம் இம்மையில் காப்பாய் போற்றி!
ஓம் இருவினை அகற்றுவோய் போற்றி!
ஓம் இங்கண் இருப்பாய் போற்றி!
ஓம் இடையூறு அகற்றுவாய் போற்றி!
ஓம் இந்திரியம் அடக்கினோய் போற்றி!
ஓம் ஈந்து மகிழ்வாய் போற்றி!
ஓம் ஈகம் கமழ்வாய் போற்றி!
ஓம் ஈனில் இல்லாய் போற்றி!
ஓம் ஈஸ்வரி மைந்தா போற்றி!
ஓம் ஈன்றார் பெருமையே போற்றி!
ஓம் ஈட்டம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஈடினை இல்லாய் போற்றி!
ஓம் ஈசனின் மகனே போற்றி!
ஓம் ஈடேற்றி விடுவாய் போற்றி!
ஓம் உகப்பு தருவாய் போற்றி!
ஓம் உகவை அளிப்பாய் போற்றி!
ஓம் உண்மையில் உறைந்தோய் போற்றி!
ஓம் உழைப்பார்க்கு நல்லாய் போற்றி!
ஓம் உளவியல் அறிந்தோய் போற்றி!
ஓம் உச்சியப்பனே போற்றி!
ஓம் உத்தி அறிந்தோய் போற்றி!
ஓம் உந்துரு வாகனா போற்றி!
ஓம் உந்மத்தம் அழிப்பாய் போற்றி!
ஓம் உமாபதி மைந்தா போற்றி!
ஓம் உம்பர் கோமானே போற்றி!
ஓம் உபசரித்தல் மகிழ்வாய் போற்றி!
ஓம் உரகம் அணிந்தோய் போற்றி!
ஓம் உழப்பு தீர்ப்பாய் போற்றி!
ஓம் உவாமதி அன்னாய் போற்றி!
ஓம் உவனாய் நிற்பாய்
போற்றி!
ஓம் ஊக்கவர் துணையாய் போற்றி!
ஓம் ஊதம் தலைவா போற்றி!
ஓம் ஊறுபாடு நீக்குவாய் போற்றி!
ஓம் ஊற்றம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஊன்கணார் துணையே போற்றி!
ஓம் ஊனம் அழிப்பாய் போற்றி!
ஓம் ஊதியம் தருவாய் போற்றி!
ஓம் ஊட்டம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஊக்கம் தருவாய் போற்றி!
ஓம் ஊமத்தம் அணிவாய் போற்றி!
ஓம் ஊழ்வினை அழிப்பாய் போற்றி!
ஓம் எல்லையில்லா வள்ளலே போற்றி!
ஓம் எக்கியம் களிப்பாய் போற்றி!
ஓம் எண்குணன் செல்வனே போற்றி!
ஓம் எஞ்ஞான்றும் காப்போய் போற்றி!
ஓம் எதிர்மை அறிவோம் போற்றி!
ஓம் எம்பெருமான் மகனே போற்றி!
ஓம் எம்மை துணையாய் போற்றி!
ஓம் எருக்கு அணிவோய் போற்றி!
ஓம் எல்லார் முதல்வனே போற்றி!
ஓம் எலியூரும் வாகனா போற்றி!
ஓம் எய்ப்பு நீக்குவோய் போற்றி!
ஓம் எங்கணும் இருப்பாய் போற்றி!
ஓம் எளிமையின் உறைவே போற்றி!
ஓம் ஏகதந்தனே போற்றி!
ஓம் ஏகம்பர் மகனே போற்றி!
ஓம் ஏதம் நீக்குவோய் போற்றி!
ஓம் ஏவாப்பு தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஏழைக்கிரங்குவோய் போற்றி!
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஏரண்டத் தலைவா போற்றி!
ஓம் ஏக சக்ரவர்த்தியே போற்றி!
ஓம் ஐம்முகன் மகனே போற்றி!
ஓம் ஐங்கர நாயகா போற்றி!
ஓம் ஐயை புதல்வா போற்றி!
ஓம் ஐவளம் தருவாய் போற்றி!
ஓம் ஐந்தெழுத்து உணர்த்துவாய் போற்றி!
ஓம் ஐஐக்கு ஐயா போற்றி!
ஓம் ஐயம் நீக்குவாய் போற்றி!
ஓம் ஐராவதம் போன்றோய் போற்றி!
ஓம் ஒளி தரும் வதனா போற்றி!
ஓம் ஒட்டலர் நீக்குவாய் போற்றி!
ஓம் ஒடுக்குதல் உணர்த்துவாய் போற்றி!
ஓம் ஒஃகுதல் இல்லாய் போற்றி!
ஓம் ஒன்றுநர் ஆனாய் போற்றி!
ஓம் ஒள்வளம் சேர்ப்பாய் போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பு நாயகா போற்றி!
ஓம் ஓம்கார ரூபனே போற்றி!
ஓம் ஓங்கார முதலே போற்றி!
ஓம் ஓசம் தருவாய் போற்றி!
ஓம் ஒளவியம் நீக்குவோய் போற்றி!
ஓம் ஒளடதம் களைவாய் போற்றி!
ஓம் ஒளவைக்கு அருளினோய் போற்றி!
ஓம் ராஜாதி ராஜனே போற்றி போற்றி!!!
அகலிடம் _ உலகம்
ஆவலிப்பு – கர்வம்
ஆலம்பம் – அடைக்கலம்
ஆலம் – மஞ்சள்
ஆலவாய் – பாம்பு
ஆலமர் - ஆலமரத்தின்
கீழ் அமர்ந்த சிவன்
இயவுள் – தலைவன்
ஈகம் – சந்தனம்
ஈனில் – கரு உயிர்க்கும் இடம்
ஈட்டம் – வளமை
உஞற்று – முயற்சி
உகப்பு _ உயர்வு
உகவை - மகிழ்ச்சி
உவன் – பின்னும் முன்னும் நிற்பவன்
உந்துரு – எலி
உந்மத்தம் – மயக்கம்
உழப்பு – குழப்பம்
உம்பர் – வானோர்
உரகம் – பாம்பு
உவாமதி – முழுநிலா
ஊதம் – யானைக்கூட்டம்
ஊற்றம் - வலிமை
ஊன்கணார் – மானிடர்
ஊமத்தம் – ஒரு வகை பூ
எக்கியம் – யாகம் / வேள்வி
எண்குணன் - எட்டு
குணங்களை உடைய சிவன்
எதிர்மை – எதிர்காலத்தில் நிகழ்தல்
எய்ப்பு - வறுமை
ஏதம் – குற்றம் / நோய்
ஏவாப்பு – துன்பம்
ஏரண்டம் – பேரண்டம்
ஐம்முகன் – சிவன்
ஐயை - துர்கை
ஒடுக்குதல் - அடக்குதல்
ஒஃகுதல் – பின்வாங்குதல்
ஒன்றுநர் - நண்பன்
ஒள்வளம்- அறிவு / அழகு
ஓசம் – கீர்த்தி
ஒளவியம் - பொறாமை
ஒளடதம் - மருந்து
*********************
Awesome write up! ����
ReplyDeleteVery nice miss.
ReplyDeleteGood information mam
ReplyDeleteAs usual , super Miss 🤩✨💟
ReplyDeleteமிக அருமையான பதிவு mam.108 போற்றிகளுக்கான அகராதி விளக்கங்களும் மிக மிக அருமை mam. இந்த வருட விநாயகச் சதுர்த்தி அன்று உங்களது விநாயகர் போற்றியோடு இனிதே துவங்குகிறேன்.
ReplyDeleteVery nice ����
ReplyDeleteExcellent Uma..Very appropriate slokas..You have also given the meanings to understand the slogans.
ReplyDeleteLooking forward to more and more from you.
Soooperb dear
ReplyDeleteExcellent sloka
Awesome dear with meanings
sooo.... divine
Expecting more from u dear
ReplyDeleteKeep rocking 👍
Very simple and nice sloka.👌
ReplyDeleteMeaning given at the end of the sloka is fabulous idea.👍
Kudos .💐..to mam.
Excellent and great effort. Meaning given at the end will make us understand it better. Chanting the Slokas knowing it's meaning will really give satisfaction. 👏👏
ReplyDeleteSuperb no words to say.Excellent.defenetly on I will recetate this slogan only .
ReplyDeleteஉயிர் எழுத்தை முதலாக வைத்து விநாயகர் போற்றி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்
ReplyDeleteஉங்களது படைப்புகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான விளக்கவுரையுடன் கூடிய விநாயகர் அகவல். கண்டதும் களிப்புற்றேன். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ReplyDeleteமிக்க அருமை, வாழ்க வளமுடன்
ReplyDelete